கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதில் எந்தப்பயனும் இல்லை-GMOA

278 0

கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையில் கடுமையான பயணக் கட்டுப்பாடுகளை விதிக்குமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கமும் இலங்கை மருத்துவ சங்கம் கோரிக்கை விடுத்துள்ளன.

வைரஸ் தொற்று இரு வாரங்களுக்குப் பின்னரே அறிகுறிகளை காட்டுவதாக இலங்கை மருத்துவ சங்கத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே வரவிருக்கும் வாரங்களில் மிக மோசமான சூழ்நிலை குறித்து ஜனாதிபதிக்கும் அமைச்சரவைக்கும் தெரியப்படுத்தியுள்ளதாகவும் அவர் கூறினார்.

தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள புதிய வேகமாக பரவி வருகிறது என்றும் இது நாட்டின் முதல் மற்றும் இரண்டாவது அலைகளின் போது கண்டறியப்பட்ட மாறுபாட்டைப் போன்றதல்ல என்றும் வைத்திய நிபுணர் பத்மா குணரத்ன சுட்டிக்காட்டினார்.

அத்தோடு பி.சி.ஆர் சோதனை முடிவுகளைப் பெறுவதில் ஏற்படும் தாமதம் குறித்த நோயாளியின் இருந்து வேறு நபர்களுக்கு பரவ வாய்ப்பாக அமையும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய மாறுபாடு ஏற்கனவே பல பகுதிகளுக்கு பரவியுள்ளதால், கொரோனா வைரஸின் பரவலைக் கட்டுப்படுத்த கிராமசேவகர் பிரிவுகளை முடக்குவதில் எந்தப்பயனும் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

இதேவேளை ஒரு நாளைக்கு 25 இறப்பு என்ற அடிப்படையில் சென்றால் 10 நாட்களுக்கு 250 இறப்புகள் பதிவாகும் என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வைத்தியர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.