ஆனந்தபுர பெட்டிச் சமர் !
தமிழீழப் போர் வரலாற்றில்
உலகம் வியந்த சாதனை படைத்தவர்கள் …
போரின் அதிநுட்ப யுத்திகளின்
உச்சம் தொட்டவர்கள் …
சிங்களத்தையும் ,வல்லரசுகளையும்
அடிபணியவைத்து
பேச்சுவார்த்தைக்கு இழுத்தவர்கள் …
தலைவரின் விழி அலையில்
போரின் வெற்றிப் பாதைகள் கண்டவர்கள் …
ஆம் …அவர்கள்தான்
நம் முதுநிலைத் தளபதிகள் …
அன்று …ஆனந்த புரத்திலும்
அக்கினிக் குழம்பாகி போர் களத்தில்
புரட்சி பொங்க களமாடினார்கள் …
சர்வதேசப் பலத்தின் திமிரில்
பாரின் போர் விதிகளையும் மீறி
தமிழரின் கூடாரங்களையும் ,குடிசைகளையும்
இலக்காக்கி அக்கினி மழை பொழிந்து
இனஅழிப்புச் செய்தது சிங்களம் …
ஆனந்த புரத்தில் …
முதுநிலை தளபதிகளின்
மிகச் சக்தி வாய்ந்த படைகள் நின்றது …
தமிழீழ உயிர் மூச்சின்
உயிர்ப்பைக் காக்கவேண்டிய
பெரும் கடமையில்
உருக்கொண்டு நின்றது படைகள்
ஆனந்தபுரப் பெட்டிச் சமரில்
தீயலையாய் எழுந்து
எதிரிகளை தாக்கியது தமிழீழப் படை …
ஒவ்வொரு தளபதியும் …
ஒவ்வொரு போர் வீரனும் …
நெருப்பாற்றின் ஆழம் வரை சென்று
எதிரிகளை சுழியோடி அழித்தனர் …
அப்பொழுதான் …
அந்தப் போர் மீறல் நிகழ்ந்தது …
வல்லரசுகள் வழங்கிய
நச்சுக் குண்டுகளை
சரமாரியாக பொழிந்தது சிங்களம் …
அந்த நச்சுக் குண்டுகளின் மத்தியிலும்
அறம் வெல்ல உருக்கொண்டு களமாடிய
உரம் கொண்ட தளபதிகளும் …
புலிவீரம் பறைசாற்றி மறத்துடன் களமாடிய
திறன் கொண்ட வீரர்களும் …
உரிமைப் போரின் அக்கினியில்
ஆகுதியாகி வீரச்சாவடைத்தனர் …
கைகோர்த்த வல்லரசுகளின் பலமே
பொய்யர்களின் வெற்றிக்கு வழிவகுத்தது – இது
புலிகளின் பலத்தை அறிந்த சிங்களம்
வல்லரசுகளின் காலில் விழுந்து பெற்ற வெற்றி .
அகரப்பாவலன்.