தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு நஸ்டஈடு -இலங்கை போக்குவரத்துச் சபை

282 0

ctbநாடு முழுவதும் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட பேரூந்து ஊழியர்களின் பணிப் பகிஷ்கரிப்பின் போது, தாக்குதலுக்குள்ளானவர்களுக்கு நஸ்டஈடு வழங்கப்பட்டுள்ளது.
நாரஹேன்பிடவிலுள்ள இலங்கை போக்குவரத்துச் சபை பிரதான அலுவலகத்தில் வைத்து நேற்று நஸ்டஈடு வழங்கப்பட்டது.

இதற்கமைய போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா பாதிக்கப்பட்டவர்களுக்கு நஸ்டஈட்டை வழங்கினார்.நஸ்டஈட்டைப் பெற்றவர்களில் இராணுவ அதிகாரி உள்ளிட்ட பயணிகள் நால்வர், 18 சாரதிகள் மற்றும் நடத்துனர் ஒருவரும் அடங்குவதாக போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும் இதன்போது பாதிக்கப்பட்ட இராணுவ வீரருக்கு 50 ஆயிரம் ரூபாவும் ஏனையவர்களுக்கு 25 ஆயிரம் மற்றும் 20 ஆயிரம் ரூபாவும் நஸ்டஈடாக வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.