கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கடந்த மூன்று மாதங்களாக அடையாளம் காணப்படாத மற்றும் உரிமை கோரப்படாத சுமார் 20 சடலங்கள் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலங்களில் அதிகமானவை ஆண்களின் சடலங்கள் என்றும் பெண் ஒருவரின் சடலமும் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.
உரிமை கோரப்படாத சடலங்களை அடையாளம் காண்பதற்காக அந்தந்த பொலிஸ் நிலையங்களின் ஊடாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
உறவினர்கள் பற்றி தெரிந்தவுடன் சடலங்களை அவர்களிடம் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என, கொழும்பு தேசிய வைத்தியசாலை தெரித்துள்ளது.
சடலத்தை அடையாளம் காண முடியாவிட்டால் அரச செலவில் அவற்றை அடக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என, வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் கூறியுள்ளார்.