மாகாணங்களுக்குள் மாத்திரம் ரயில் சேவைகளை முன்னெடுப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
பெரும்பாலும் நாளை முதல் மாகாணங்களுக்குள் ரயில் சேவைகள் செயற்படலாம் என திணைக்களத்தின் பிரதி முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.
ரயில் சேவை பயணங்கள் தொடர்பில் இன்றைய தினம் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நாட்டில் கோவிட் தொற்று தீவிரம் அடைந்துள்ள நிலையில் இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணத் தடை அமுலுக்கு வருகிறது.
இதற்கான உத்தரவினை நேற்றைய தினம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வழங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.