பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி Michel Rocard அவர்களுக்கு இரங்கல் செய்தி

599 0

மதிப்புக்குரிய பிரான்ஸ் நாட்டின் முன்னாள் பிரதம மந்திரி மிஷல் றொகார்ட் அவர்கள் 02.07.2016 அன்று மண்ணுலகை விட்டு விண்ணுலகம் அடைந்துவிட்டார்.அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.

OLYMPUS DIGITAL CAMERA

திரு. மிஷல் றொகார்ட் அவர்கள் தமிழ் மக்களின் இனப்பிரச்சனையைத் தீர்த்து வைக்கவேண்டும் என்று அரும்பாடுபட்டுவந்ததுடன், 2009ம்ஆண்டு ஸ்ராஸ்பூர்க் நகரத்தில் நடை பெற்ற கருத்தரங்கு ஒன்றில் தமிழ் மக்களின் இனப்பிரச்சனை தொடர்பாக கருத்துக்களை வெளியிட்டு இருந்தார். அத்துடன் 2011ம் ஆண்டில் பிரஞ்சு பாராளுமன்றத்திலும் தமிழ் மக்கள் தொடர்பாக, தமிழ் மக்கள் பிரதிநிதிகளுடன் உரையாடலும் நடாத்தியிருந்தார்.

பிரஞ்சு மண்ணில் எமக்காக குரல் கொடுத்த ஒரு உத்தமர் எம்மைவிட்டு நீங்கிவிட்டார்.
அவரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகின்றோம்.

ஐரோப்பியத் தமிழர் ஒன்றியம்.