மூன்று வாரங்களுக்கு ஊரடங்கை அமுல்படுத்தி நிவாரணம் வழங்க வேண்டும் – மனோகணேசன் எம்.பி

319 0

நாட்டு மக்களை காப்பாற்ற வேண்டுமாயின் தொடர்ச்சியாக மூன்று வாரங்களுக்கு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என  கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மனோகணேசன்  தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஊரடங்கு அமுல்படுத்தப்படும் காலப்பகுதியில் வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு தலா 20,000 ரூபா வீதம் வழங்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுமார் ஆறு நாடுகளிலிருந்து, இலங்கைக்குள் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. இதனால் இலங்கையில் தற்போது கொவிட்-19 தொற்றினால் பலியானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக கர்ப்பிணி பெண்களும், சிறுவர்களும் கொவிட் தொற்றுக்கு இலக்காகும் வீதமும் தற்போது அதிகரித்து வருகின்றமை வேதனையளிக்கிறது.

எனவே நாட்டில் தொடர்ந்து அதிகரித்துவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த வேண்டுமாயின் அரசாங்கம் மீண்டும் முழு ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும். இல்லையேல் எதிர்வரும் செப்டெம்பர் மாதமளவில் 20,000 உயிரிழப்புக்களை நாம் சந்திக்க வேண்டிவரும் என தெரிவித்தார்.