சுகாதார சட்டத்தை மீறுவர்களை தூக்கி வாகனத்தில் ஏற்ற வேண்டாம்! – பொலிஸாருக்கு அறிவுரை

309 0

சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வரும் நபர்களை கைது செய்யும் போது அவர்களையும் பாதுகாக்க வேண்டும் அதற்காக அவர்களை தூக்கி வாகனங்களில் ஏற்ற வேண்டாம் என மட்டக்களப்பு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சுதத் மாரசிங்க பொலிசாருக்கு  அறிவுரை வழங்கியுள்ளார்.

மட்டக்களப்பில் பொலிஸார் இன்று (திங்கட்கிழமை) மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு சோதனை நடவடிக்கை ஆரம்பிப்பதற்கு முன் பொலிஸாருக்கு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அறிவுரைகளை வழங்கியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

பொலிஸ் என்ற ரீதியில் முன்னெடுக்கும் கொரோனா சுகாதார பாதுகாப்பு நடவைக்கைகளின் போது சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் முககவசம் அணியாமல் வருபவர்களை கைது செய்வதற்கான முழு அதிகாரம் பொலிஸாருக்கு இருக்கின்றது.

எனவே நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள கொரோனா மூன்றாவது அலை மிகவும் உக்கிரம் அடைந்து வரும் நிலையில் சுகாதர நடைமுறைகளை பேணாதவர்களை கைது செய்து தனிமை படுத்தல் சடத்தின் மூலம் தனிமை படுத்தவும்.

அதேவேளை பொலிஸாரான உங்களையும் பாதுகாத்து சுகாதார நடைமுறைகளை பின்பற்றாமல் வரும் நபர்களை கைது செய்யும் போது அவர்களையும் பாதுகாக்க வேண்டும் அதற்காக அவர்களை தூக்கி வாகனங்களில் ஏற்ற வேண்டாம்.

சுகாதர சட்டத்தை மதிப்பவர்களாவுக்கு மதிப்பளிக்க வேண்டும் அது பொலிஸாரின் கடமை அதே போன்று சுகாதார சட்டத்தை உதாசீனம் செய்பவர்களை கைது செய்ய முடியும்” என தெரிவித்தார்.