2021 மே மாதம் 06 ஆம் திகதி தொடக்கம் மே மாதம் 09 ஆம் திகதி வரை இடம்பெற்றுள்ள கொவிட் 19 தொற்றாளர்கள் 15 பேரின் மரணம் தொடர்பில், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நேற்றைய தினம் (09) உறுதி செய்துள்ளார்.
அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 801 ஆகும்.
இதற்கமைய,
01.பண்டாரகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 52 வயதுடைய பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே மாதம் 09 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் ஹைபோதைரொயிட் நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
02.அம்பிட்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய பெண் ஒருவர், பேராதனை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 08 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று, குருதி நஞ்சானமை மற்றும் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
03.கணேமுல்ல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 46 வயதுடைய ஆண் ஒருவர், வெலிசறை காச நோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 06 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
04.ராகமை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 72 வயதுடைய பெண் ஒருவர், வடகொழும்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் 19 தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 08 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, உக்கிர சுவாசக் கோளாறு சிண்ட்ரோம், மாரடைப்பு மற்றும் நீரிழிவு நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
05.குளியாப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 56 வயதுடைய ஆண் ஒருவர், முல்லேரியா ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, அங்கிருந்து தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 08 ஆம் திகதி அன்றுஉயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமையால் ஏற்பட்ட அதிர்ச்சி, உக்கிர சிறுநீரக சிதைவடைவு, கொவிட் நியுமோனியா, உக்கிர சுவாசக் கோளாறு சிண்ட்ரோம் மற்றும் மாரடைப்பு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப் பட்டுள்ளன.
06.பிபிலை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 59 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், 2021 மே 07 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் புற்றுநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
07.கல்கிரியாகம பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 60 வயதுடைய பெண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 07 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
08.குளியாப்பிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 62 வயதுடைய பெண் ஒருவர், குளியாப்பிட்டி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 09 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
09.பசறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 74 வயதுடைய ஆண் ஒருவர், பதுளை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 08 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, உயர் குருதியழுத்தம், நீரிழிவு, நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
10.வஸ்கடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 69 வயதுடைய பெண் ஒருவர், களுத்துறை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 07 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா, நீரிழிவு மற்றும் உயர் குருதியழுத்தம் போன்ற நிலைமைகளே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
11.நேபொட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய பெண் ஒருவர், ஹொரணை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 மே 08 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
12.போம்புவல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 75 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 06 ஆம் திகதி அன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
13.நாவுத்துடுவ பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 86 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 06 ஆம் திகதி அன்று களுத்துறை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் இதயநோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
14.கொழும்பு 07 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 61 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், கொவிட் தொற்றாளராக அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 மே 08 ஆம் திகதி அன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா மற்றும் நாட்பட்ட சிறுநீரக நோய் நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.
15.மடோல்கெலே பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 57 வயதுடைய பெண் ஒருவர், 2021 மே 06 ஆம் திகதி அன்று மடோல்கெலே வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்று மற்றும் மாரடைப்பு நிலைமையே மரணத்திற்கான காரணங்களாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.