இலங்கையில் மேலும் சில பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டன

233 0

இலங்கையில் 5 மாவட்டங்களைச் சேர்ந்த மேலும் சில கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.

இதற்கமைய கம்பஹா, அம்பாறை, களுத்துறை, இரத்தினபுரி, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் 16 கிராம சேவகர் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதன் முழுமையான விபரம்

கம்பஹா

  • மஹர பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,  எடிகெஹெல்கல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவு
  • கட்டானை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, கே.சி.சில்வா கிராம சேவகர் பிரிவு
  • கதிரான வடக்கு கிராம சேவகர் பிரிவை சேர்ந்த எடபகஹாவத்த கிராமம்
  • கதிரான தெற்கு கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த பேஷகர்ம கிராமம்
  • வத்தளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, சேதவத்தை கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த மஹபமுனுகம பிரிவு
  • குன்ஜகஹவத்த கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 44 ஆவது லேன்
  • நில்சிறி கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த 3 ஆவது மற்றும் 7ஆவது லேன்

அம்பாறை 

  • தெஹியத்தகண்டிய பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, நவமெதகம கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த நவமெதகம பிரிவு
  • பக்மீதெனிய கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த ரனஹெலகம பிரிவு
  • சேருபிடிய கிராம சேவகர் பிரிவைச் சேர்ந்த சேருபிடிய உப பிரிவு

இரத்தினபுரி

  • இரத்தினபுரி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, அங்கம்மன 182 கிராம சேவகர் பிரிவு

களுத்துறை

  • மொரகஹஹேன பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, பலன்னொருவ 604 கிராம சேவகர் பிரிவு
  • கொரலஹிம 604 ஏ கிராம சேவகர் பிரிவு
  • கும்புக மேற்கு 607 ஏ கிராம சேவகர் பிரிவு
  • ஹொரணை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட,  நர்த்தனகல 606 சி கிராம சேவகர் பிரிவு

மொனராகலை

  • மொனராகலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட, போஹிடிய கிராம சேவகர் பிரிவு