உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் விதமாக ஈஷா அறக்கட்டளை சார்பில் சிறப்பு யோகா வகுப்புகள் ஆன்லைன் முறையில் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் மக்கள் தங்கள் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமான ஒன்றாக மாறியுள்ளது. மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்த யோகா சிறந்த கருவியாக இருப்பதை உலக அளவில் பல்வேறு அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
இந்நிலையில், கொரோனா பாதிப்பு காலத்தில் ஈஷா யோகா மைய நிறுவனர் சத்குரு சில பிரத்யேக யோகா பயிற்சிகளை வடிவமைத்துள்ளார். அவரின் வழிகாட்டுதல் படி, நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் நுரையீரல் திறனை அதிகரிக்கும் விதமாக ‘சிம்ம க்ரியா’ என்ற பயிற்சியும், ஆக்சிஜன் அளவை அதிகரிக்கும் விதமாக ‘சஷ்டாங்கா’ என்ற பயிற்சியும் பொது மக்களுக்கு இலவசமாக கற்றுக்கொடுக்கப்பட்டு வருகிறது. மேலும், உணவு முறை பற்றிய குறிப்புகளும் வழங்கப்படுகிறது.
அந்த வகையில், இவ்வகுப்புகள் மே 31-ம் தேதி வரை தினமும் இரவு 7 மணிக்கு ஆன்லைனில் நடத்தப்படும். தமிழில் சுமார் 40 நிமிடங்கள் நடக்கும் இவ்வகுப்பில் பொதுமக்கள் தங்கள் வீட்டில் இருந்தப்படியே பங்கேற்கலாம். வகுப்பில் பங்கேற்க isha.co/DailyYoga என்ற இணையதள முகவரியில் முன்பதிவு செய்து கொள்வது அவசியம்.