யாழ். பல்கலைக்கழக பட்டதாரிகள் நஞ்சற்ற விவசாய முயற்சியில்

253 0

கிளிநொச்சி, திருவையாறு பிரதேசத்தில் யாழ். பல்கலைக்கழக விவசாய பட்டதாரி மாணவர்கள் சிலரினால் மேற்கொள்ளப்படுகின்ற நவீன முறையிலான நெல் நாற்று நடப்படும் செயற்பாட்டை இன்று பார்வையிட்ட கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இளையோரின் முயற்சிகளை பாராட்டி உற்சாகப்படு்த்தினார்.

குறித்த பொறிமுறையினால் களைகள் கட்டுப்படுத்தப்படுவதன் மூலம் களநாசினிப் பிரயோகம் மட்டுப்படுத்தப்படுவதுடன் அதிக விளைச்சலை பெற்றுக்கொள்ள முடியும் என்வும் உற்பத்திச் செலவு குறைவடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அரசாங்கத்தின் எண்ணக்கருவுக்கு ஏற்வாறு நஞ்சற்ற விவசாயம் மக்களுக்கு வழங்க வேண்டும் என்ற குறிக்கோளோடு நெல் விவசாயம் மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு ஏற்றவாறு நெல்லை தாங்கள்  குறைந்த செலவில் பாத்திகள் அமைத்து நெல்களை முளைக்க வைத்து அவற்றை நாற்று நடும் இயந்திரம் மூலம் விவசாயிகளுக்கு  குறைந்த செலவில் நாற்றும் நாட்டி அந்த வயல் நிலங்களுக்கு புல் பிடுங்கும் இயந்திரம் மூலம் களைகளை பிடுங்கி களைநாசினிகள் 100 வீதம் தெளிக்காமல் நஞ்சற்ற அரிசி வழங்கும் முயற்சி யால்  விவசாயிகளுக்கு மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த முயற்சியை பார்வையிட்ட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, இவ்வாறான செயற்பாடுகளுக்கு தன்னுடை ஆதரவும் அரசாங்கத்தினது ஒத்துழைப்பும் தொடர்ச்சியாக வழங்கப்படும் என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.