பால் கொள்முதல் விலை உயர்வு – தமிழக அரசு அரசாணை வெளியீடு

268 0

தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்ற பின் மு.க.ஸ்டாலின் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு உள்ளார். அதில் ஒன்று, ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைக்கப்படுகிறது. இம்மாதம் 16-ம் தேதி முதல் இது அமலுக்கு வருகிறது.

இந்நிலையில், தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்தி தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

கொள்முதல் விலையில் பசும் பால் லிட்டருக்கு  4 ரூபாயும், எருமைப் பால் லிட்டருக்கு 6 ரூபாய் உயர்த்தியும் தமிழக அரசு ஆணை வெளியிட்டுள்ளது.

அதன்படி பசும்பால் விலை லிட்டருக்கு 28 ரூபாயில் இருந்து 32 ஆகவும், எருமைப்பால் விலை 35 ரூபாயில் இருந்து 41 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.