பழனியில் ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் பிரம்ம கமலம் பூ

299 0

பிரம்மாவுக்கு உகந்த பூவானது பிரம்ம கமலம் பூ. இந்த மலரில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும்போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

பிரம்மனின் நாடிகொடி என வர்ணிக்கப்படுபவை பிரம்ம கமலம் பூக்கள் இளவேனிற் காலத்தில் மட்டும் பூக்கும் இந்த பூ நள்ளிரவில் பூத்து அதிகாலை உதிர்ந்து போகும் அத்துடன் இந்த பூவின் வாசம் அந்த பகுதியை ஈர்க்கும் வல்லமை கொண்டது. ஒரே செடியில் 40க்கும் மேற்பட்ட பூக்கள் பூக்க கூடியவை.

பிரம்மாவுக்கு உகந்த பூவானது பிரம்ம கமலம் பூ. இந்த பூ மிகவும் வாசனையுடன் இருக்கும். ஆனால் விரைவில் வாடிவிடும். இந்த மலரில் மற்றொரு சிறப்பு என்னவென்றால் அந்த மலர் மலரும்போது நாம் என்ன நினைத்து வேண்டினாலும் அது கண்டிப்பாக நடக்கும் என்பது ஒரு நம்பிக்கை.

பழனி அடிவார பகுதியை சேர்ந்தவர் ராஜா. இவர் தனது வீட்டில் பிரம்ம கமலச்செடியை வளர்த்து வந்தார். இதில் ஒரு பிரம்ம கமலம் பூ பூத்தது.

இது தொடர்பாக அவரிடம் கேட்டபோது கடந்த 2018 ஆம் ஆண்டு எனது வீட்டில் பிரம்ம கமலம் பூ ஒரே நேரத்தில் 3 பூக்கள் பூத்தது. தற்போது ஒரு பூ பூத்துள்ளது. மேலும் ஓரிரு நாட்களில் நான்கு பூ பூக்க உள்ளது என கூறினார். பிரம்ம கமலம் பூ பூத்ததை அறிந்த அக்கம் பக்கத்தினர் வந்து ஆர்வமுடன் பார்த்து வணங்கி சென்றனர்.