ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஸ்புட்னிக் V (Sputnik V) தடுப்பூசி நாளை முதல் இந்நாட்டு மக்களுக்கு செலுத்தப் படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.
அதன்படி, கொழும்பு கொதடுவை பிரதேசத்தில் 30 வயதுக்கும் 60 வயதுக்கும் இடைப்பட்ட நபர்களுக்கு இந்த தடுப்பூசியின் முதலாவது டோஸ் நாளை (06) முதல் பெற்றுக் கொடுக்கப் படவுள்ளது.
ரஷ்யாவின் ஸ்புட்னிக் V (Sputnik V) கொவிட் தடுப்பூசியின் முதல் தொகுதி கடந்த மூன்றாம் திகதி இரவு இலங்கையை வந்தடைந்தது.
அதனடிப்படையில் முதல் தொகுதியில் 15,000 தடுப்பூசிகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.