கொரோனா தொற்றை எதிர்த்துப் போராடுவதற்காக ஒதுக்கப்பட்ட நிதியை வேறு எந்த திட்டங்களுக்கும் அர சாங்கம் பயன்படுத்தாது என இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரி வித்துள்ளார்.
கொவிட் -19 தடுப்பு பணிகளுக்குத் தேவையான அனை த்து நிதிகளையும் நிதி அமைச்சர் ஒதுக்கியுள்ளதாகவும் நாமல் பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
நாடு முழுவதும் உடற்பயிற்சி கூடங்களை அமைக்க அமைச்சரவையால் ஒதுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 600 மில்லியன் ரூபாவை கொவிட் -19 தடுப்பு நடவடிக் கை களுக்குப் பயன்படுத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரவு -செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதியே இந்த திட்டத்திற்குப் பயன்படுத்தப்படும். இருப்பினும், இப் போது கொள்முதல் செயல்முறையை மட்டுமே செய் வோம். இப்போது நிதி செலவிடப்படாது எனவும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.