கொரோனா வைரஸ் மரணங்களிற்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் – எதிர்கட்சி

241 0

கொரோனா வைரசினை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார வழிகாட்டுதல்களை நடைமுறைப்படுத்தும் போது அரசாங்கம் உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றவில்லைஎன எதிர்கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹேசா விதானகே இதனை தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் அரசாங்கத்தில் உள்ளவர்களை பாதுகாப்பது குறித்து கவனம் செலுத்துகின்றார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொரோனாவைரஸ் தடுப்பூசியின் இரண்டாவது டோஸினை பெற்றுக்கொள்ளுமாறு நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் எனினும் உலக சுகாதார ஸ்தாபனம் நாடாளுமன்ற உறுப்பினர்களிற்கு முன்னுரிமை வழங்ககூடாது என தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ரஸ்யாவிலிருந்து இறக்குமதிசெய்யப்படும்மருந்து தற்போதைய நெருக்கடியை எதிர்கொள்வதற்கு போதுமானதா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

கொரோனா வைரஸ் மரணங்களிற்கு அரசாங்கமே பொறுப்பேற்கவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.