மேல் மாகாணத்தில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் 75 பேர் கைது

241 0

மே 1ஆம் திகதி வெளியிடப்பட்ட கொவிட்-19 புதிய சுகாதார வழிகாட்டுதல்களின்படி தடை செய்யப்பட்ட பொது நடவடிக்கைகளில் பங்கேற்றதற்காக 75 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேல் மாகாணத்திலுள்ள மசாஜ் நிலையங்கள், இரவு விடுதிகள் மற்றும் பந்தய மையங்களில் நேற்று மாலை 4.00 மணி முதல் அதிகாலை 1.00 மணி வரை விஷேட சோதனைகள் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

இலங்கையில் கொரோனா வைரஸின் மூன்றாவது அலை பரவுவதால் பொதுக்கூட்டங்களுக்கும் சில நிறுவனங்களின் செயற்பாடுகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

நேற்று முன்னெடுக்கப்பட்ட விஷேட நடவடிக்கையின் போது 47 இரவு விடுதிகள், 105 பந்தய மையங்கள் மற்றும் 133 மசாஜ் நிலையங்கள் சோதனை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட 75 பேரில் 07 நிறுவன முகாமையாளர்கள், 17 பணியாளர்கள், 50 பங்கேற்பாளர்கள் அடங்குவர்.

இதனிடையே தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி சூதாட்டத்தில் ஈடுபட்டமைக்காக வெலிபென்ன மற்றும் களுத்துறை வடக்குப் பகுதிகளில் 09 பேர் கைது செய்யப்பட்டனர்.

சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றத் தவறிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.