பிரான்சு திரான்சி (Drancy)நகரசபை முன்றலில் நடை பெற்ற கவனயீர்ப்பு மற்றும் இனப்படுகொலை நிழற்பட ஆதார காட்சிப்படுத்தலும் மே-18 தமிழின அழிப்பு நினைவேந்தலும். இலங்கை அரசாங்கத்தை குற்றவியல் நீதி மன்றத்திற்கு பாரப்படுத்தி சர்வதேச சுயாதீன விசாரணை நடாத்தப்பட வேண்டும். அதற்கான முன்நகர்வையும் ஆதரவையும் பிரான்சு அரசாங்கம்
மேற்கொள்ள வேண்டும். பிரான்சு நாட்டில் உள்ள நகரசபைகள் பிரான்சு அரசிடம் இதை வலியுறத்த வேண்டும் என்ற கோரிக்கையுடன் தொடர் கவனயீர்ப்பு ஒன்றுகூடலும் இனப்படுகொலைக்கான நிழற்பட காட்சிப்படுதலும் பாரிஸ் நகரிலும் அதனை அண்மித்த நகரங்களிலும் நடைபெற்று வருக்கின்றது.
நேற்றையதினம் 4.05.2021 10h00 மணி முதல் 17h00 மணிவரை Drancy நகரசபை முன்றலில் குறித்த கவனயீர்பு நடைபெற்றது. இந்த கவனயீர்ப்பின் போது Drancy நகரசபை நகர சபையின் முதல்வர் அவர்களுடன் சந்திப்பு இடம்பெற்று எமது கோரிக்கையடங்கிய மனுவும் வழங்கப்பட்டது.
குறித்த இவ் சந்திப்பில் திரான்சி நகரசபை தமிழ் மக்களோடு தொடர்ந்து பயணிப்பதையும் கடந்த பெப்ரவரி 11 திரான்சி நகரசபையில் தமிழ் மக்களுக்கு ஆதரவான தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் மீண்டும் நினைவுபடுத்தியிருந்தார்.ஈழத்தமிழர்களுக்கு நீதிகிடைக்க திரான்சி நகரசபை தொடர்ந்து குரல் கொடுக்கும் என்ற உறுதிமொழியை மீண்டும் நினைவுபடுத்தியிருந்தார்.