ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் தி.மு.க. போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும்

318 0

201612211033517050_thirunavukkarasar-interview-jallikattu-support-action-dmk_secvpfஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக நடைபெறும் தி.மு.க. போராட்டத்தில் காங்கிரஸ் பங்கேற்கும் எனறு தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் இன்று காலை சென்னையில் இருந்து விமானம் மூலமாக மதுரை புறப்பட்டு சென்றார்.

சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது திருநாவுக்கரசர் கூறியதாவது:-

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி, அலங்காநல்லூரில் தி.மு.க. சார்பில் 3-ந்தேதி போராட்டம் நடத்துவது வரவேற்கத்தக்கது. இந்த போராட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்து அதில் கலந்து கொள்கிறது.ஜல்லிக்கட்டு விவகாரத்தில் மத்தியில் உள்ள பா.ஜனதா அரசு மக்களை ஏமாற்றி வருகிறது.

பொங்கல் விழாக்கள் வரும்போதெல்லாம் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணனும்,  தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜனும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு கண்டிப்பாக நடக்கும் என்று உறுதி அளிப்பார்கள். ஆனால் அது நடைமுறைக்கு வராது. காட்டு விலங்குகள் பட்டியலில் இருக்கும் மாடுகளை வீட்டு விலங்குகள் பட்டியலில் சேர்த்து ஜல்லிக்கட்டை நடத்த மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி தனியாக போராட்டம் நடத்தவும் தயாராக உள்ளது.தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவரான இளங்கோவனுடன் வாக்குவாதம் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் நான் செயல்படவில்லை. பொதுவாழ்வில் ஈடுபடுபவர்களை விமர்சனம் செய்வதில் தவறு இல்லை. இளங்கோவன் மீது எனக்கு தனிப்பட்ட வெறுப்போ, காழ்ப்புணர்ச்சியோ இல்லை. இன்று பிறந்தநாள் காணும் அவருக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என்னை விமர்சனம் செய்ததற்காக அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாது. விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பும் எண்ணமும் இல்லை.

எனது மகனை பற்றி தவறான தகவல்களை பரப்பிவிட்டுள்ளனர். ரூபாய் நோட்டு பிரச்சினையை தீர்க்க மத்திய அரசு தேவையான நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும்.இவ்வாறு திருநாவுக்கரசர் கூறினார்.