மழைக்காலம் வருவதால் மண்சரிவுகள் குறித்து பொது மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தின் பணிப்பாளர் ஆசிரி கருணவர்தன எச்சரித்துள்ளார்.
குறிப்பாக கேகாலை, மாத்தளை, கண்டி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் வசிக்கும் மக்கள் மண்சரிவு, கற்பாறைகள் சரிதல், மின்னல் தாக்கம் மற்றும் மரம் முறிந்து வீழ்தல் தொடர்பில் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை வாளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அனுராதபுரம், பொன்னறுவை, மாத்தளை, குருணாகல், கண்டி, கம்பஹா, கேகாலை, கொழும்பு, நுவரெலியா, பதுளை, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய 14 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை வழங்கியது.