கட்டிடம் ஒன்றின் 10 ஆம் மாடியில் உள்ள மின்தூக்கி அமைந்துள்ள பகுதியில் இருந்து விழுந்து இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கட்டுமான பணிகள் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருந்த குறித்த கட்டிடத்தில் சேவை செய்த ஒருவரே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொள்ளுபிட்டிய, மல்பார பகுதியில் உள்ள கட்டிடம் ஒன்றிலேயே நேற்று மாலை 5.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
25 வயதுடை ரத்மலான பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.