அதிகாரம்மிக்க அமைச்சரை உருவாக்கும் திட்டத்துக்கு சுதந்திரக் கட்சி எதிர்ப்பு!

293 0

6066480428_568a21198a_zஅதிகாரம்மிக்க அமைச்சர் ஒருவரை உருவாக்கும் திட்டத்தை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிர்க்கின்றது என பெற்றோலிய வள அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். “இவ்வாறு அதிகார அமைச்சர் ஒருவரை உருவாக்கும் வகையிலான செயற்பாட்டுக்கு சுதந்திரக் கட்சி எந்த வகையிலும் ஆதரவளிக்காது.

அதிகார அமைச்சர் ஒருவரின் செயற்பாட்டினால் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை சுதந்திரக் கட்சி நன்கு அறியும். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் தோல்விக்கும் இதுவே காரணம். எனினும் நாட்டுக்கு துரித கதியில் முதலீடுகளை கொண்டு வரக்கூடிய சட்ட ரீதியான ஏற்பாடுகளை செய்ய கட்சி ஆதரவளிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.