இலங்கைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த 86 இந்தியர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர்

243 0

இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில்  நுழைய முற்பட்ட  86 இந்தியர்கள் கடற் படையினரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாகக் கடற்படையினரால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்ததாவது,

சட்டவிரோதமான முறையில் இலங்கைக் கடலுக்குள் நுழைவதைத் தடுப்பதற்காக பாக்கு நீரிணையில் கடற் படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கை யின் போது 11 மீன்பிடி படகுகளில் வருகை தந்த 86 இந்தி யர்கள் இலங்கைக்குள் நுழைய முற்பட்ட போது கடற்படையி னரால் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை  தெரிய வந்துள்ளது.

 

அத்துடன், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இலங்கைக்கு நுழைவதால் கொரோனா தொற்றுப் பரவ அதிக வாய்ப்புள்ளமையால்,  இதனைத் தடுக்கும் வகையில் கடற்படையினர் கடந்த 24 மணி நேரமும் ரோந்துப் பணிகளை முன்னெடுத்துள்ளனர்.

அதன்படி, மன்னார் தெற்கு கடற்படையினர் மேற்கொண்ட விசேட ரோந்து நடவடிக்கையின் போது​​ இலங்கை கடலுக்குள் நுழைய முயன்றதாகச் சந்தேகிக்கப்படும் 11 இந்திய மீன்பிடிப் படகுகள்  இலங்கை கடலுக்குள் நுழைவதைத் தடுத்துள்ளனர்.

மேலும், சட்டவிரோதமாகக் கடல் வழியாக நாட்டிற்குள் நுழைவதைத் தடுக்க கடற்படையினர் வடமேல் மற்றும் வட கடல்களில் ரோந்துப் பணிகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.