கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் மற்றும் உணவட்டுன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதி ஒன்றில் இருந்து 54 கொரோனா தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொக்கல சுதந்திர வர்த்தக வலயத்தில் மே மாதம் 1 ஆம் மற்றும் 2 ஆம் திகதிகளில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் 24 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் உணவட்டுன சுற்றுலா விடுதியில் இருந்து 28 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விடுதியில் தற்போது 150 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், விடுதி 14 நாட்களுக்கு மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.