நாட்டிற்கு விஷேட அமைச்சர் ஒருவர் அவசியமில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாரஹேன்பிட்டி அபயாராம விகாரையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிறந்த சேவையினை மேற்கொள்வார்களாயின் அவர்களே விஷேட அமைச்சர்களாவர்.
அதனைவிடுத்து, விஷேட அமைச்சர் ஒருவர் அவசியமில்லை.
எங்களது ஆட்சிகாலத்தில் விஷேட ஜனாதிபதி ஒருவர் மாத்திரமே பதவி வகித்தார்.
தற்போதைய பண்டிகை காலத்தில், அரிசி, முட்டை உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன.
எங்களது ஆட்சிகாலப்பகுதியில் பண்டிகை காலங்களின் போது அரிசி, முட்டை உள்ளிட்ட பல பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டிருந்தன.
இன்று ஊடகங்களுக்கு உண்மை தன்மையை வெளிக் கொணர தடைவிதிக்கப்படுகின்றது எனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.