தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறி செயற்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் மேலும் 187 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்று(ஞாயிற்றுக்கிழமை) நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
இவர்களில் அதிகமானவர்கள் திருகோணமலை மாவட்டத்திலேயே கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கமைய இதுவரையில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய 4 ஆயிரத்து 642 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.