ஜேர்மனியில் பாரவூர்தி ஒன்றை மோதச் செய்து விபத்தை ஏற்படுத்தியமைக்காக, பாகிஸ்தான் அல்லது ஆப்கானிஸ்தானைச் சேர்ந்த அகதி ஒருவர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
பேர்லின் நகரில் கிறிஸ்மஸ் அங்காடி ஒன்றினுள் குறித்த பாரவூர்தி செலுத்தப்பட்டதில் 12 பேர் பலியாகினர்.
மேலும் 48 பேர் வரையில் காயமடைந்துள்ளனர்.
குறித்த நபர் கடந்த பெப்ரவரி மாதம் ஜேர்மனிக்கு சென்று அகதி அந்தஸ்த்து கோரியுள்ளார்.
ஏறகனவே அவர் மீது சிறுகுற்றச்சாட்டுகள் இருக்கின்றன.
எனினும் தீவிரவாத தொடர்புகள் இருப்பதாக இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.