சீனாவினால் சுவீகரிக்கப்பட்ட அமெரிக்காவின் நீர் மூழ்கி படகு மீண்டும் அமெரிக்காவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க பாதுகாப்பு தலைமையகம் இதனை உறுதிப்படுத்தியுள்ளது.
குறித்த நீர்மூழ்கி படகு சுவீகரிக்கப்பட்ட பகுதிக்கு அருகில் வைத்தே அமெரிக்காவிடம் அது மீண்டும் கையளிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நீர்மூழ்கி படகு தென்சீனக் கடலில் தொடர்ந்து பயணிக்கும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
கடந்த வியாழக் கிழமை இந்த படகு சீனாவினால் சுவீகரிக்கப்பட்டது.
இதனை அடுத்து இரண்டு நாடுகளுக்கும் இடையில் நட்பு ரீதியான பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதைத் தொடர்ந்து அது மீண்டும் விடுவிக்கப்பட்டுள்ளது.