எதிர்வரும் மாகாணசபைத் தேர்தலில் தமிழ்க் கட்சிகள் பெண்களுக்கு 30 வீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்எனஉழைக்கும் மகளீர் அமைப்பின் இயக்குனர்
மிதுலைச்செல்வி ஸ்ரீ பத்மநாதன்தெரிவித்தார்
உழைக்கும் மகளீர் அமைப்பின் இன்றைய மே தின ஒன்று கூடலின் பின்னர் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு.
பெண்கள் அனைவரையும் ஒன்றிணைத்து சமூக பொருளாதார ரீதியாகமுன்னேற வைக்க வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்
ஆனால் மே தினமாகிய இன்றைய தினமானது நாம் ஒரு பெரிய நிகழ்வினை ஏற்பாடு செய்திருந்தோம் எனினும் அதனை தற்போது நிறுத்தி இருக்கின்றோம் எனினும் இன்றைய தினம் ஒரு சிறிய ஒன்றுகூடல் மேற்கொண்டுள்ளோம் அதாவது அரசியலில் 30 வீதமான இட ஒதுக்கீடு மாகாண சபை மற்றும் பாராளுமன்றத்திலும் பெண்களுக்கு வழங்கப்பட வேண்டும் இம்முறை தமிழ் பெண்கள் எவரும் பாராளுமன்றம் செல்ல வில்லை ஆனால் பெரும்பான்மை கட்சிகளில் க பெண்கள் பலர் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றம் சென்று இருக்கின்றார்கள் ஆனால் தமிழ் மக்களைப் பொறுத்தவரைக்கும் பெண்களில் ஒருவரும் பாராளுமன்றம் செல்ல வில்லை என்பது குற்றச்சாட்டாக காணப்படுகின்றது
யுத்த காலத்தில் இருந்து பெண்களாகிய நாங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறோம் எனவே பெண்கள் எமது பிரச்சனையை தீர்ப்பதற்கு நாமே பாராளுமன்றம் மற்றும் ஏனைய சபைகளுக்கு செல்வதன் மூலம் எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக் கொள்ள முடியும் எனவே எம்மை போன்ற பெண்களை பாராளுமன்றம் அனுப்புவதன் மூலம் தங்களுடைய பிரச்சனைகளை தாங்களே தீர்த்துக் கொள்வார்கள் எனினும் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட பெண்கள் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கும முகம் கொடுத்துக் கொண்டு கையேந்தி நிற்கும் நிலை காணப்படுகின்றது பலர் கடனாளிகளாக இருக்கின்ற நிலை காணப்படுவதோடு பலர் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் காணப்படுகின்ற தோடு சமூக மட்டத்தில் பல பாதிப்புக்களை எதிர்நோக்கி இருக்கிறார்கள் எனவே அவ்வாறான பெண்களின் வாழ்வாதாரத்தை வாழ்க்கை தரத்தை உயர்த்த வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே நாங்கள் எமது அமைப்பின் மூலம் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருகின்றோம் ஒ
வ்வொரு மாதமும் போயா தினங்களில் அனைத்து பெண்களையும்இணைத்துஒன்றுகூடல் நடத்துவது வழக்கம் அதேபோலத்தான் மே தினமாகிய இன்றைய தினம் இந்த ஒன்றுகூடலிலை ஏற்பாடு செய்திருக்கிறோம் எமது மே தின கோரிக்கையாக 30 வீதம் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கப்படவேண்டும்.
முக்கியமாக தமிழ் கட்சிகள் தமிழரசுக் கட்சியாக இருக்கலாம் ரெலோ,புளொட். மற்றும் விக்னேஸ்வரன் அனந்தி சசிதரன் போன்ற அனைத்து தமிழ் கட்சிகளும் பெண்களுக்கு 30 வீதமான இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்பதுதான் மேதின தினமாகிய இன்றைய தினம் எமது கோரிக்கையாகும்ஏற்கனவே தமிழ் கட்சிகள் ஒரு கருத்தை வைத்திருக்கின்றார்கள் வெல்லக்கூடிய பெண்களை தேர்தலை நிறுத்துவது இல்லை வெல்லாத பெண்களை நிறுத்தி விட்டு பெண்கள் தேர்தலில் வெல்ல மாட்டார்கள் என காண்பிப்பது வழமை எனவே அனைத்து தமிழ் கட்சிகளும் 30 வீத இட ஒதுக்கீட்டை எதிர்வரும் மாகாணசபை தேர்தலில் வழங்க வேண்டும் என்பதுதான் மே தினத்தில் எமது கோரிக்கையாக காணப்படுகின்றது பல்வேறுபட்ட திறமையான பெண்கள் உள்ளார்கள் அவர்களை தேர்தலில் நிறுத்தினால் கட்டாயம் வெல்வார்கள் ஆனால் தமிழ் கட்சிகள் ஒரு கருத்தினை நாட்களாக கொண்டிருக்கின்றார்கள் அதாவது பெண்களை தேர்தலில் நிறுத்தினால் வெல்ல மாட்டார்கள் அதாவது வெல்ல முடியாதவர்கள் தேர்தலை நிறுத்தினால் அவர்கள் வெல்ல மாட்டார்கள் திறமையானவர்களை தேர்தலில் நிறுத்தி அவர்களை மாகாணசபைத் தேர்தலின் மூலம் மாகாண சபைக்கு அனுப்பி வைக்க அனைத்து கட்சிகளும் இந்த கோரிக்கைக்கு உடன்பட வேண்டும் எனவும் தெரிவித்தனர்.