சிறுநீரக நோயை கட்டுப்படுத்த வேலைத்திட்டம்

285 0

d242d1a8d545207f565a4d34ddd0b4b7_lசிறுநீரகத் தொகுதி கோளாறை கட்டுப்படுத்த விசேட நீண்டகால வேலைத்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட வேண்டும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

நாட்டு மக்கள் மத்தியில் சிறுநீரகக் கோளாறு நோய் அதிக அளவில் பரவியுள்ளது.

இதனை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருவதாக அவர் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்த நோயைக் கட்டுப்படுத்த ஜனாதிபதி எடுத்துள்ள நடவடிக்கைகளை பாராட்டி, சிறுநீரக வைத்திய நிபுணர்களின் சர்வதேச சங்கத்தினால் விருது ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.