கொரோனா வைரஸ் தொற்று விரைவாக அதிகரித்து வருகின்றமையினால் அதிகளவான தொற்றாளர்கள் இனங்காணப்படும் பகுதிகளை உடனடியாக முடக்கும் செயற்பாட்டினை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றன.
அந்தவகையில் கொழும்பு- பிலியந்தல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாம்பமுனுவ, கொரக்காபிட்டி கிராம சேவகர் பிரிவுகள் தற்போது முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.
இதேவேளை காலி- அம்பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடஹேன, தல்கஸ்கொட கிராம சேவகர் பிரிவுகள் இன்று முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் அம்பாறை- தெய்யத்தகண்டி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தெய்யத்தகண்டி மற்றும் கதிராபுற கிராம சேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி கூறியுள்ளார்.
இதனிடையே இரத்தினபுரி- கலவானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹப்புகொட கிராம சேவகர் பிரிவும், தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.