நேற்று பதிவான 11 கொரோனா மரணங்கள் தொடர்பான முழுமையான விபரம்!

256 0
கொவிட் 19 தொற்றால் நேற்று (30) 11 பேர் உயிரிழந்துள்ளமையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள் உறுதி செய்துள்ளதுடன், அதற்கமைய இலங்கையில் பதிவாகியுள்ள கொவிட் 19 தொற்று மரணங்களின் மொத்த எண்ணிக்கை 678 ஆக அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதற்கமைய

01. பிலியந்தலை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 79 வயதுடைய பெண் ஒருவர், 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

02. தெஹியத்தகண்டிய பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 76 வயதுடைய ஆண் ஒருவர், பொலன்னறுவை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்று மற்றும் தீவிர மாரடைப்பு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

03. மாத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 67 வயதுடைய பெண் ஒருவர், மாத்தளை மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் 2021 ஏப்ரல் 29 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் ஏற்பட்ட நுரையீரல் அழற்சி நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

04. களுத்துறை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 82 வயதுடைய ஆண் ஒருவர், ஸ்ரீ ஜெயவர்தனபுர பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இங்கிரிய ஆதார வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

05. வத்தளை பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 53 வயதுடைய ஆண் ஒருவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக வைத்தியசாலைக்கு மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த மருத்துவமனையில் 2021 ஏப்ரல் 29 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார்.

கொவிட் நியூமோனியா மற்றும் சுவாசத் தொகுதி தொற்று நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 06. திவுலபிட்டி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 51 வயதுடைய ஆண் ஒருவர், 2021 ஏப்ரல் 29 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் தொற்றுடன் மோசமடைந்த நாட்பட்ட ஈரல் நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

07. பெப்பிலியாவல பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 77 வயதுடைய ஆண் ஒருவர், வத்துபிட்டிவல ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் 19 தொற்றுடன் கூடிய நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

08. அநுராதபுரம் பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 64 வயதுடைய பெண் ஒருவர், அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொவிட் தொற்றுக் கண்டறியப்பட்ட பின்னர் நொச்சியாகம மாவட்ட வைத்தியசாலைக்கும் பின்னர் அநுராதபுரம் மெத்சிரி செவன சிகிச்சை நிலையத்துக்கும் மாற்றி அனுப்பப்பட்டதுடன், குறித்த சிகிச்சை நிலையத்தில் 2021 ஏப்ரல் 30 ஆம் திகதியன்று உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியாவால் ஏற்பட்ட தீவிர சுவாசக் கோளாறு நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

09 கொழும்பு 14 பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 94 வயதுடைய ஆண் ஒருவர், 2021 ஏப்ரல் 28 ஆம் திகதியன்று வீட்டில் உயிரிழந்துள்ளார். கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 10 பரகஸ்தொட்ட பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 65 வயதுடைய ஆண் ஒருவர், 2021 ஏப்ரல் 28 ஆம் திகதியன்று களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார். குருதி நஞ்சானமை, கொவிட் 19 தொற்று மற்றும் இதய நோய் நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

11 களனி பிரதேசத்தை வதிவிடமாகக் கொண்ட 46 வயதுடைய பெண் ஒருவர், 2021 ஏப்ரல் 27 ஆம் திகதியன்று கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்துள்ளார். தீவிர சுவாசக் கோளாறு மற்றும் கொவிட் நியூமோனியா நிலைமையே மரணத்திற்கான காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.