இலங்கையின் கடற்றொழிலாளர்களை பாதுகாக்கும் சட்டங்களை மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக செயலாளர் வை.கோ எதிர்க்கின்றமைக்கான காரணங்களை விளக்க வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச இது தொடர்பில் டுவிட்டர் பக்கத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.
வைகோ எப்போதும் ஈழத் தமிழர்கள் பற்றி கருத்து வெளியிடுகிறார்.
ஆனால் ஈழத் தமிழ் கடற்றொழிலாளர்களை பாதுகாக்கும் வகையிலான சட்டங்களை அவர் எதிர்க்கிறார்.
இதற்கு எதிராக ராமேஸ்வரத்தில் ஆர்ப்ப்பாட்ட பேரணி ஒன்றையும் நடத்தி இருக்கிறார்.
இது முரண்பாடுகளை காட்டுவதாக நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.