ரெம்டெசிவிர் மருந்து அனைத்து மாநகராட்சிகளிலும் கிடைக்க வேண்டும்- ஜவாஹிருல்லா வலியுறுத்த

297 0

தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், ‘உயிர் காக்கும் மருந்தகம்’ துவக்கப்பட்டு மருந்து ரூ.9400-க்கு 6 டோஸ் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கொரோனா தொற்று ஏற்பட்டவர்கள் “ரெம்டெசிவிர்” மருந்துக்காக அலையும் சூழல் ஏற்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகள், மருந்தகங்களில் மிகப்பெரிய தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தமிழக மருத்துவப் பணிகள் கழகம் சார்பில், சென்னை, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை வளாகத்தில், ‘உயிர் காக்கும் மருந்தகம்’ துவக்கப்பட்டு மருந்து ரூ.9400-க்கு 6 டோஸ் மருந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதனை அறிந்த நோயாளிகளின் உறவினர்கள், ரெம்டெசிவிர் மருந்து வாங்க, கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் திரண்டு வருகின்றனர். வெளியூர்களில், சிகிச்சை பெறுவோர், சென்னையில் உள்ள தங்கள் நண்பர்கள், உறவினர்கள் வாயிலாக மருந்துகளைப் பெற்று வருகின்றனர். இதனால் இந்த மருந்தகத்தில் கூட்டம் அலைமோதுகிறது.

தமிழக அரசு இதுபோன்ற மருந்தகத்தை, திருச்சி, மதுரை, கோவை, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அமைக்க வேண்டும் எனவும், மேலும் இந்த மருந்தகத்தில் 24 மணி நேரமும் விற்பனை செய்ய வேண்டும் எனவும் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.