பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுகள் கையாளப்படும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் எச்சரிக்கை

318 0

batti-phi-20-12-2016மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவு உணவங்களில் பிளாஸ்டிக் பாத்திரங்களில் உணவுகள் கையாளப்படும் உணவக உரிமையாளர்களுக்கு எதிராக சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எ.லதாகரனின் வழிகாட்டலுக்கமைய, மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள அனைத்து சுகாதார பரிசோதகர் பிரிவுகளிலுமுள்ள உணவங்களில் இன்று சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதன்போது உணவு ஒழுங்கு விதிகளுக்கு முரணான வகையில், உணவுகள் கையாளும் உணவங்கள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

குறித்த சோதனை நடவடிக்கையின்போது உணவங்களில் உணவு பொருட்களை கையாளுவதற்காக உபயோகிக்கப்பட்ட அனைத்து பிளாஸ்டிக் பொருட்களும், சுகாதார பரிசோதகர்களினால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவ்வாறு பிளாஸ்டிக் பாத்திரங்கள் கைபற்றப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.