நாட்டில் நிலவும் கொரோனா அச்ச நிலைமைகள் காரணமாக, கட்சியின் மே தின நிகழ்வுகளை இரத்துச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.
இதன்படி கட்சியின் அனைத்து மே தினக் கொண்டாட்டங்களும் நிறுத்தப்படும்.
முன்னதாக ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலானோருடன் மே தின நிகழ்வுகளை நடத்த ஐக்கிய தேசியக் கட்சி திட்டமிட்டிருந்தது.
எனினும், கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுடன் கலந்துரையாடலைத் தொடர்ந்து தற்போதைய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.