தீவகப் பகுதிகளிலுள்ள மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீரமானம்

283 0

download-1நாட்டில் அபிவிருத்தி அடையாத மற்றும் வடக்கில் தீவகப் பகுதிகளிலுள்ள மக்களின் மின்சார தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 115 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி தீரமானித்துள்ளது.

இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடும் நடவடிக்கை நிதி அமைச்சில் இன்று இடம்பெற்றுள்ளது.இலங்கை அரசாங்கம் சார்பாக நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி சார்பில் அதன் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி ஸ்ரீ விதோவனி ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.