ரிஷாட் பதியுதீனை விடுதலை செய்யக்கோரி மன்னாரில் ஆர்ப்பாட்டம்!

319 0

அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும் அவரை விடுதலைசெய்யக் கோரியும் மன்னாரில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சமூக இடைவெளிகளைப் பின்பற்றி, முகக் கவசம் அணிந்து, சுகாதார வழிகாட்டலுக்கு அமைவாக இன்று (வியாழக்கிழமை) இந்தப் போராட்டம் நடைபெற்றது.

குறித்த, போராட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் மன்னார் பிரதேச சபையின் தவிசாளர் முஜாஹிர், முசலி பிரதேச சபை தவிசாளர் சுபிஹான் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.

இதேவேளை, ரிஷாட் பதியுதீன் கைதுசெய்யப்பட்டமைக்கு எதிராக, நேற்று வவுனியாவில் கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.