நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் தொற்று பரவல் நிலைமையை அடுத்து, பள்ளிவாசல்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
சுகாதார தரப்பினரின் ஆலோசனைக்கமைய, பள்ளிவாசல்களுக்கு அவசர கட்டுப்பாடுகள் விதிக்க வக்பு சபை தீர்மானித்துள்ளது.
இதனை, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
அதற்கமைய, சகல பள்ளிவாசல்களிலும் தாராவீஹ், ஜும்ஆத் தொழுகை மற்றும் பயான்கள், இயாமுல்லைல், இஃதிகாப், தவ்பா போன்ற அனைத்து கூட்டு செயற்பாடுகளும் மறு அறிவித்தல் வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.
மேலும், ஒரே நேரத்தில் பள்ளிவாசல்களில் தொழுகைக்காக அனுமதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 25 பேராக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த எண்ணிக்கையில ஐவேளை தொழுகைக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.