முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளது-ரூபவதி கேதீஸ்வரன்

312 0

mullai-gamமுல்லைத்தீவு மாவட்டத்தில் மூவாயிரத்து 270 மில்;லியன் ரூபா நிதியொதுக்கீட்டில் பல்வேறு அபிவிருத்தித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.முல்லைத்தீவு மாவட்டத்தின் இவ்வருடத்திற்கான இறுதி அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் நேற்று நடைபெற்றது.

குறித்த ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் அறிமுக உரையாற்றிய முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன், முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

பல்வேறு திட்;டங்களினூடாக அதற்கான நிதிகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இதனடிப்படையில் இவ்வாண்டு மூவாயிரத்து 270 மில்லியன் ரூபாவிற்கும் மேலான நிதி கிடைத்துள்ளது என்றும், இதன் மூலம் பல அபிவிருத்தித்திட்;டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.அத்துடன் 2017ம் ஆண்டுக்கான திட்டங்களும் குறித்த கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதாகவும் முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.