வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு வெளியிட்ட அறிக்கை

272 0

தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் காரணமாக, எமது சில கொன்சியூலர் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும் என வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு குறிப்பிட்டுள்ளது.

குறித்த அறிக்கையில்…

சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்காக வெளிநாட்டு அமைச்சின் கொன்சியூலர் விவகாரப் பிரிவுக்கு வருகை தருபவர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு ஆகியன நாங்கள் முன்னுரிமையளிக்கும் பிரதான அம்சங்களாகும்.

தற்போதைய கொவிட்-19 தொற்று நிலைமை மற்றும் அண்மையில் வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்கள் ஆகியவற்றின் காரணமாக, எமது சில கொன்சியூலர் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட வகையில் வழங்கப்படும்.

எனவே, எதிர்வரும் வாரங்களில், கொன்சியூலர் விவகாரப் பிரிவினால் வழங்கப்படும் சேவைகள், அவசரமான / உண்மையான தேவைகளையுடையவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும்.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களின் மரணங்கள் சார்ந்த விடயங்கள், ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் அதனுடன் சம்பந்தப்பட்ட ஏனைய சான்றிதழ்களுக்கு சான்றளித்தல் ஆகியன தவிர்ந்த கொன்சியூலர் சேவைகள் கட்டாயமான முன் நியமனத்தின் அடிப்படையில் மாத்திரம் வழங்கப்படும்.

முன் நியமனங்களை மேற்கொள்வதற்காக 011 2335942, 011 2338836 மற்றும் 011 2338812 ஆகிய தொலைபேசி இலக்கங்களில் அல்லது consular@mfa.gov.lk என்ற மின்னஞ்சல் முகவரியினூடாக தொடர்பு கொள்ளவும்.