கொரோணா நோய்த்தொற்று உள்ளாகி திருகோணமலை மாவட்டத்திலுள்ள தனிமைப்படுத்த நிலையங்களில் சிகிச்சை பெற்று வருகின்றவர்களில் நால்வருக்கு கடந்த இரண்டு நாட்களுக்குள் அபாயகரமான நிலைமைக்கு தள்ளப்பட்டு இருப்பதன் காரணமாக அவர்கள் மேலதிக சிகிச்சைகளுக்காக வேறு வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர் என திருகோணமலை மாவட்ட பிரதி பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் வி. பிரேமானந்த் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக அவர்கள் அவதியுற்றதாகவும் இதன் காரணமாக குறித்த மூவரில் ஒருவரை முல்லேரியா வைத்தியசாலைக்கும் மற்றைய இருவரையும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கும் நேற்று ஏதேனும் ஒருவரை திருகோணமலை வைத்தியசாலை இடமாற்றம் செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
குறித்த நபர்கள் ஒக்சிஜனில் லதங்கி சிகிச்சை பெற வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார் இந்த நிலைமையானது திருகோணமலை மாவட்டத்தில் முதற்தடவையாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள தல வைத்தியசாலைகளை இப்படியான அறிகுறிகள் ஏற்படும் நோயாளர்களை பராமரிப்பதற்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு தள்ளப்பட்டிருப்பதாக குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் புதிய 67 தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 2, கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 5, குரிஞ்சாங்கேணி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, தம்பலகாமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 1, திருகோணமலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 27, உப்புவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 31, அடங்கலாக திருகோணமலை மாவட்டத்தில் 67 கொரோணா நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.
இந்த வருடத்தில் திருகோணமலை மாவட்டத்தில் 1269 நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் அடையாளங் காணப்பட்டுள்ளனர்.என்பதும் குறிப்பிடத்தக்கது.