பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுக்கு பொலிஸ் தலைமையகத்தில் இருந்து விஷேட அறிவித்தல் ஒன்று வௌியிடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
ஏதாவது ஒரு பொலிஸ் அதிகாரி தனிமைப்படுத்தல் பகுதியில் வசித்து வந்தால் அவர் கடமைக்கு சமூகமளிக்காமல் தனிமைப்படுத்தல் காலம் முடிவடையும் வரையில் குறித்த பகுதியில் தங்கியிருக்குமாறு அவர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் பொலிஸ் நிலையங்களில் பயன்படுத்தும் தனவல் புத்தகம் தொடர்பில் விஷேட சுற்றறிக்கை ஒன்று வௌியிடப்பட்டுள்ளது.
அதில் குறித்த தகவல் புத்தகத்தை பயன்படுத்துவதை மட்டுப்படுத்துமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் விதமாக இந்த தீ்ரமானம் எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.