சுவிசில் சிறப்பாக நடைபெற்ற தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம்,
அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும்
நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகர் தேசத்தின்குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் பத்தாம் ஆண்டும், தமிழீழ அரசியற்துறைப் பொறுப்பாளர் பிரிகேடியர் சு.ப.தமிழ்ச்செல்வன் உட்பட 7 மாவீரர்களினதும், தமிழீழ விடுதலைப் புலிகள் பிரான்ஸ் கிளையின் பொறுப்பாளர் கேணல் பருதி அவர்களினதும் நினைவுகள் சுமந்த வணக்க நிகழ்வானது 18.12.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று பாசெல்;; மாநிலத்தில் மிகவும் சிறப்பாக எழுச்சியுடன் நடைபெற்றது.
சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்வணக்க நிகழ்வில் பொதுச்சுடரேற்றலுடன் தமிமீழத் தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டதனைத் தொடர்ந்து ஈகைச்சுடர் ஏற்றி அகவணக்கத்துடன் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது. மக்களால் சுடர், மலரஞ்சலி செலுத்தப்பட்ட சமவேளையில் மாநிலவாழ் சிறுவர்களாலும், இளையோர்களாலும் எழுச்சிப் பாடல்கள்; இசைக்கப்பட்டன.
மாவீர வித்துக்களான அரசியல் பெருந்தகைகள் மற்றும் புலத்தில் அயராது உழைத்த கேணல் பருதி அவர்களின் நினைவுகள் சுமந்த இவ்வணக்க நிகழ்வின் எழுச்சி நிகழ்வுகளாக இளையோர்களின் நடனங்கள், பாடல்கள் மற்றும் காலத்தின் தேவை கருதிய சிறப்புரையோடு, சமகால அரசியல் சார்ந்த கலந்துரையாடலுடன் அது சார்நத விளக்கத்தொகுப்பும்; இடம்பெற்றது.
இவ்வெழுச்சி நிகழ்வில் பல நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டமையானது மீள் எழுச்சியுடன், மிகவும் உணர்வுபூர்வமாகவும், நம்பிக்கையைத் தருவதாகவும் அமைந்திருந்தது. நிகழ்வின் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் பாடலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியக்கொடி இறக்கலோடு தமிழர்களின் தாரக மந்திரத்துடன் நிகழ்வுகள் யாவும் எழுச்சியுடன் நிறைவுபெற்றன.