அமரிக்காவில் மற்றும் ஒரு கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்

528 0

American-Policeஅமரிக்க லவ்சீயானா மாநிலத்தில் கறுப்பினத்தை சேர்த்த ஒருவர் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்டமையை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக பிரதேசத்தில் பாரிய ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்று வருகின்றன.
அந்த நாட்டின் காவல்துறையினருக்கு எதிராக இந்த ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுவருகின்றன.
இந்தநிலையில் மினசோட்டை மாநிலத்தில் இந்த கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
இவரை சுட்டுக்கொன்ற காட்சிகள் காணொளியில் பதிவுசெய்யப்பட்டுள்ளன
சாரதி அனுமதிப்பத்திரத்தை காவல்துறையினரிடம் காண்பிப்பதற்காக அதனை எடுத்தவேளையிலேயே குறித்த கறுப்பினத்தவர் சுட்டுக்கொல்லப்பட்டார்
இந்தநிலையில் சம்பவத்தின்போது சிற்றூந்தில் கொல்லப்பட்டவருடன் பயணித்த அவரது நண்பி, அவசியமற்ற முறையில் காவல்துறையினர் இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்;
அவர் பயணித்த வாகனத்தில் துப்பாக்கி ஒன்று இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
எனினும் அது அனுமதிப்பெற்ற துப்பாக்கி என்ற நண்பி குறிப்பிட்டுள்ளார். எனவே இது கறுப்பினத்தவர் என்ற காரணத்தினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவம் என்றும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இதேவேளை துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை அதிகாரி கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்டு;ள்ளார்.
சம்பவத்தை நேரில் பிரதேச வர்த்தகர் ஒருவர் தமது தகவலில், காவல்துறை அதிகாரிக்கு எவ்வித அச்சுறுத்தலும் அற்றநிலையில் அவர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டு இந்தகொலையை செய்ததாக குறிப்பிட்டுள்ளார்