வெளிநாடுகளில் இருந்து வருவோருக்கு மீண்டும் அமுலுக்கு வந்துள்ள நடைமுறை

281 0

வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வருகை தருவோருக்கான தனிமைப்படுத்தல் காலம், மீண்டும் 14 நாட்கள் வரை நீடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி  தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்ததை அடுத்தே இந்த நடைமுறை அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்கு வருகைதருவோரில் அதிகளவிலானோர், கொவிட் தொற்றாளர்களாக அடையாளம் காணப்படுகின்றனர். வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்களை நாட்டிற்கு அழைத்து வருகின்றமை குறித்து, பலர் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்ற போதிலும், அந்த நடவடிக்கைகளை தாம் நிறுத்தப் போவதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், வெளிநாடுகளிலிருந்து அழைத்து வருவோருக்கான தனிமைப்படுத்தல் காலம் 7 நாட்கள் வரை குறைக்கப்பட்டிருந்தது. எனினும், தற்போதுள்ள நிலைமையின் கீழ், தனிமைப்படுத்தல் காலத்தை மீண்டும் 14 நாட்கள் வரை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.