கொரோனா தொற்றால் மேலும் 04 பேர் பலி

244 0

வெளிநாட்டிலிருந்து வருகை தந்த  இருவர் கொரோனா தொற்றால் உயி ரிழந்துள்ளமை தெரியவந்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்ட நிலையில் மேலும் 04 பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 643 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரி வித்துள்ளது.

 

01.வெளிநாட்டிலிருந்து வருகை தந்து கொழும்பு – 02 பகுதியில் வசித்து வந்த  46 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தி யசா லையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்துக் கண்டி தேசிய வைத்திய சாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் சுவாசக் கோளாறு மற்றும் இதயம் செயலிழந்தமை காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

02. வெளிநாட்டிலிருந்து வருகை தந்து கொழும்பு – 02 பகுதியில் வசித்து வந்த  63 வயதான ஆண் ஒருவர் கொழும்பு தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோ னியா மற்றும் சிறுநீரக நோயால் பல உறுப்புக்கள் செயலிழந்தமை காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 23 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

03..ரத்கம பகுதியைச் சேர்ந்த 46 வயதான ஆண் ஒருவர், கராப்பிட்டி போ தனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலை யில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் உட் பிரிவு களில் ஏற்பட்ட பக்றீரியா தொற்று காரணமாக 2021 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

04. குளியாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் குளியாப் பிட்டி போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரண மாக 2021 ஏப்ரல் மாதம் 22 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.