தமிழகத்தில் முழு ஊரடங்கு – எந்தெந்த பணிகளுக்கு அனுமதி?

397 0

தமிழகத்தில் இன்று அமலில் இருக்கும் முழு ஊரடங்கில் பத்திரிகை, பால் வினியோகம் ஆகியவை வழக்கம்போல் நடைபெறும்.

தமிழகத்தில் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக இன்று அமலில் இருக்கும் முழு ஊரடங்கில் அரசு விலக்கு அளித்துள்ள பணிகள் விவரம் வருமாறு:

பால் வினியோகம், தினசரி பத்திரிகை வினியோகம் வழக்கம்போல் நடைபெறலாம்.

ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறையினர் வழக்கம்போல் பணியாற்றலாம்.

மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருத்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள் போன்ற மருத்துவத்துறை சார்ந்த பணிகள் நடைபெறலாம்.

அனைத்து சரக்கு வாகனங்கள், விவசாயிகளின் விளைப்பொருட்களை எடுத்து செல்லும் வாகனங்கள், பெட்ரோல்-டீசல், எல்.பி.ஜி. கியாஸ் போன்ற எரிபொருளை எடுத்துச் செல்லும் வாகனங்கள் வழக்கம்போல் இயங்கலாம்.

தடையின்றி தொடர்ந்து செயல்பட வேண்டிய தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் செயல்படலாம்.

ஓட்டல்களில் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரையிலும், மதியம் 12 மணி முதல் மதியம் 3 மணி வரையிலும், மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

உணவு டெலிவரி செய்யும் ஊழியர்களுக்கும் இந்த நேர கட்டுப்பாடு பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.