நாட்டில் மலேரியா மீண்டும் உருவாகும் அபாயம் இருப்பதாக மலேரியா ஒழிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் தற்போது மலேரியா பரவுதல் இல்லை என்ற போதிலும், உலகில் மலேரியா அதிகளவில் பரவியுள்ள நாடுகளில் இருந்து இலங்கைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாலும், மலேரியாவை பரப்பும் நுளம்புகள் நாட்டில் இருப்பதாலும் ஆபத்து காணப்படுவதாக அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
உலக மலேரியா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25 ஆம் திகதி கடைப்பிடிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேரியா இல்லாத நாடாக 9 வருடங்களை நிறைவு செய்து, உலக மலேரியா தினத்தை இலங்கை கொண்டாடுகிறது.
கடந்த 2012 ஆம் ஆண்டு இலங்கையில் இருந்து மலேரியா முழுவதுமாக ஒழிக்கப்பட்டது. இது தொடர்பாக உலக சுகாதார நிறுவனம் (WHO) 2016 இல் இலங்கைக்கு சான்றிதழ் ஒன்றை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.